Ginger tailgate :
Ginger tailgate :

Ginger tailgate :

குளிர் காலங்களில் அதிகம் உடல் நிலை சரியிலாமல் போகும், இதனை தடுக்க இது போன்று உடலின் சூட்டை சரி செய்யும் இஞ்சியை உணவில் சேர்த்து கொண்டால் உடலின் வெப்ப நிலை சீராகும்.

தேவையான பொருட்கள் :

1. இஞ்சி – 1 கப்

2. உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்

3. கடுகு – 1 ஸ்பூன்

4. மிளகு, சீரகம் – 1 ஸ்பூன்

5. புளி – சிறிதளவு

6. பெருங்காய தூள் – 2 சிட்டிகை

7. வெந்தயம் – 2 ஸ்பூன்

8. உப்பு, நல்லெண்ணை – தேவைக்கு

செய்முறை :

முதலில் இஞ்சியை தோல் நீக்கி தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இஞ்சியுடன் உளுத்தம் பருப்பு, மிளகு மற்றும் சீரகம் போட்டு நன்றாக அரைதுக்கொள்ள வேண்டும்.

பிறகு, கடாயில் நல்லெண்ணை ஊற்றி அது சூடானதும் கடுகு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

இதனுடன், புளியை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சுத்தம் செய்து வெறும் புளி தண்ணீரை மட்டும், வதங்கி கொண்டு இருக்கும் இஞ்சி விழுதுடன் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு வேறு கடாயில் எண்ணெய் விடாமல் கடுகு மற்றும் வெந்தயம் போட்டு சிவக்க வறுத்து அதனை பொடி செய்துக்கொள்ள வேண்டும்.

இந்த பொடியை இஞ்சி விழுதுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்கு சுருண்ட வதங்கி இறக்கினால் இஞ்சி துவையால் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here