
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்., அணியுடன் வரும் டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடரை துடங்குகிறது. இதுவரை இந்தியா மற்றும் ஆஸ்., அணிகள் ஆஸ்திரேலியாவில் 11 முறை மோதி இருகின்றன. அதில் ஆஸ்., அணி 8 முறை கோப்பை வென்றுள்ளது. மற்ற மூன்று முறையும் போட்டி ட்ரா ஆனது .
இம்முறை ஸ்மித் மற்றும் டேவிட் இருவரின் இழப்பும் ஆஸ்., அணிக்கு சற்று பாதகமாக உள்ளது. எனவே இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் கூடுதலாக இருக்கின்றது.
இது மட்டும் இல்லாமல் தற்போது இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல் பட்டு வருகின்றது. பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகின்ற இந்திய அணி நிச்சயம் கோப்பையை இம்முறையாவது கைப்பற்றும் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.