SreeKanth
ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி தொடரில் இந்திய வீரர் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதாம்பி சீனாவைச் சேர்ந்த சென் லாங்கை எதிர்கொண்டார்.

முதல் செட்டை ஸ்ரீகாந்த் கிதாம்பி 21-13 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட் தொடங்குவதற்கு முன் சென் லாங் காயத்தால் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

இதனால் ஸ்ரீகாந்த் கிதாம்பி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். சென் லாங் உடன் ஸ்ரீகாந்த் கிதாம்பி 8 முறை மோதியுள்ளார்.

இதில் இரண்டு முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இதற்கு முன் 2017-ல் ஆஸ்திரேலிய ஓபனில் வீழ்த்தியிருந்தார்.

அரையிறுதியில் ஸ்ரீகாந்த் கிதாம்பி லீ செயுக் யியு அல்லது விக்டர் அக்செல்சனுடன் மோத உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here