Super Star
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்க இருக்கும் கடைசி படத்தை பற்றி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் நடிகர் ரஜினி காந்த் என்று அனைவருக்கும் தெரியும். 100 படங்கள் தாண்டி இன்னும் நடித்து வருகிறார்.

முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினி இணைந்து உள்ள படம் தர்பார். இது வரும் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து, விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தனது 168-வது படத்தில் நடிக்க உள்ளார்.

இதனை தொடர்ந்து, ரஜினி அவர்கள் நடிக்க மாட்டார் என்றும், முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

மேலும், சிவா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தை தொடர்ந்து, ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்க முடிவெடுத்து இருப்பதாகவும், அதற்க்கான கதை தேர்வில் ரஜினி உள்ளார் என்ற தகவலும் கசிந்து உள்ளது.

கே.எஸ். ரவி குமார் மற்றும் ஒரு சில இயக்குனர்கள் கதையை கேட்டு வரும் ரஜினி யாரை தேர்ந்தெடுப்பார் என்பது தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here