அதிமுகவுக்கு எதிராக நடக்கும் தில்லு முல்லு - சிக்கிய ஆதாரம்.!! | TN Govt

DMK Digital Work Against on ADMK : பிரதான எதிர் கட்சியான திமுக சில நாட்களுக்கு முன்பு “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற பரப்புரையை துவங்கியது. அதில் லட்சக்கணக்கில் மக்கள் அதிமுகவை நிராகரித்துள்ளதாக திமுக கூறி வருகிறது .

திமுகவை ஆளுங்கட்சியாக மக்கள் பார்ப்பதாகவும், திமுக கூறிய பின்தான் அனைத்தையும் ஆளும் கட்சி நிறைவேற்றுவதாக ஸ்டாலின் தெரிவித்தார். அக்கட்சியின் இணையதள பிரச்சார யுக்தியாக werejectadmk என்கிற வலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.

DMK Digital Work Against on ADMK

அதில் லைவ் ட்ராக்கர் என்ற பெயரில் அதிமுகவை நிராகரித்தோர் எண்ணிக்கையும், நிராகரித்த கிராமங்கள் எண்ணிக்கையும் அந்த இணையத்தில் காண்பிக்கபடுகிறது .