Bigil Vs Kaithi
தீபாவளிக்கு வெளியான கைதி மற்றும் பிகில் இரண்டு பட இயக்குனர்களில் அட்லீக்கு இருக்கும் அதிஷ்டம் லோகேஷ்கு இல்லை என்று கருத்து பரவ தொடங்கி உள்ளது.

தீபாவளி விருந்தாக, அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பிகில் படமும், லோகேஷ் இயக்கத்தில் கைதி படமும் வெளியானது.

இந்த இரு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் விமர்சன ரீதியில் கைதி படம் பிகில் படைத்தை காட்டிலும் நல்ல விமர்சனத்தை பெற்றது.

இந்த நிலையில், கைதி மற்றும் பிகில் இந்த இரு படங்களில் பட்ஜெட், இயக்குனர்களின் சம்பளம் மற்றும் வசூல் ஆகியவை ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

அடிச்சி தூக்கிய பிகில் – உச்சகட்ட கொண்டாட்டத்தில் தளபதி விஜய் .!

பிகில் படத்தின் பட்ஜெட் அதிகம் அதற்கேற்ப வசூல் பெற்றது, கைதி படத்தின் பட்ஜெட் குறைவு ஆனால், வசூல் மிக அதிகம்.

இந்த நிலையில் அட்லீ, பிகில் படத்திற்காக 25 கோடி சம்பளம் பெற்றார் என்ற தகவல் வெளியாகி இருந்த நிலையில், கைதி படத்திற்காக லோகேஷ் 50 லட்சம் மட்டுமே சம்பளம் பெற்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனை கேள்விப்பட்ட நெட்சங்கள் அட்லீக்கு அவ்வளவு சம்பளம் தருகிறார்கள், சூப்பர் படம் பண்ண லோகேஷுக்கு வெறும் 50 லட்சம் தானா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here