தமிழகத்தில் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி என்ற பெண் தன்னுடைய பிரியாணி கடையில் வேலை செய்து வந்த நபருடன் கள்ளத்தொடர்பு கொண்டு அதன் பின்னர் இருவரும் திட்டம் போட்டு தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு எஸ்கேப் ஆனார் அபிராமி .

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே போல தற்போது மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தென்றல், ப்ரியமானவளே ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நிலானி. இவர் சமீபத்தில் சின்னத்திரை உதவி இயக்குனரான லலீத்குமார் காந்தி என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வருவதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து உதவி இயக்குனர் தன்னுடன் மனைவியாக குடும்பம் நடத்தி விட்டு தன்னை பிரிய முயற்சித்தால் தற்கொலை வரை சென்று உயிரை தீக்கு இரையாக்கினார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் நிலானியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வளையதளங்களில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருந்தார்.

இதனால் நிலானி உதவி இயக்குனருடன் ஜாலியாக இருந்து விட்டு தற்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்துவதாக நாடமாடியிருந்து தெரிய வந்துள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நிலானி ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் கணவருடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார். அதன் பின்னர் அவர்களை பிரிந்து வந்து லலித் காந்தியுடன் நெருக்கம் காட்டியுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இதனால் சின்னத்திரையில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. போலீசாரும் தலைமறைவாக உள்ள நிலானியை தேடி வருகின்றனர்.