Sri Reddy
தல அஜித்திற்கு கிஸ் கொடுப்பேன்.. அவரின் காலில் கூட விழுவேன் என கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. இவர் தற்போது சென்னையில் செட்டிலாகி விட்டார். ராகவா லாரன்ஸ் படத்திலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் பேஷன் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய போது பல்வேறு விசயங்களை பேசியுள்ளார்.

அப்போது நீங்கள் யாருக்கு கிஸ் கொடுக்க ஆசைப்படுகிறீர்கள் என கேட்டதற்கு எந்தவொரு தயக்கமும் இல்லாமல் தல அஜித் தான் என கூறியுள்ளார்.

மேலும் அதற்கான காரணம் என்ன என கேட்டதற்கு நேர்கொண்ட பார்வை திரைப்படம் தான் என கூறியுள்ளார். என்னுடைய வாழ்க்கையையே படமாக்கப்பட்டது போல இருந்தது.

நான் அஜித் சாருக்கு எந்தவொரு காம உணர்வும் இல்லாமல் முத்தம் கொடுக்க ஆசைப்படுகிறேன், அவரின் காலில் கூட வீழ்வேன் என கூறியுள்ளார்.

ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் வெளியான பிகில் படத்தை பார்த்து விட்டு விஜயின் ராயப்பன் கேரக்டர் அவருக்கு செட்டாகவில்லை. விஜய் இளமையாகவே தெரிந்தார் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.