சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக, ஒப்புகைச்சீட்டு முறை 100 சதவீதம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளியாகும் ஒப்புகை சீட்டில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க முடியும்.

ஆனால் இந்த சீட்டுகளை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இவற்றை தேர்தல் ஆணையம் பத்திரப்படுத்தி வைத்து கொள்ளும்.

மேலும் இந்த ஒப்புகைச்சீட்டு நடைமுறை கடந்த சில தேர்தல்களில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ‘தேர்தலின் போது, ஒப்புகைச்சீட்டு முறையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்கறிஞர் பாக்யராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்’ .

தற்போது மத்திய அரசிடம் நிலுவையில் இருந்த ரூ.3,173.47 கோடி நிதி, தேர்தல் ஆணையத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ளும் விதமாக, ஒப்புகைச்சீட்டு முறை 100 சதவீதம் அமல்படுத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.,

இதனால் வரும் மக்களவை தேர்தலில் நாடு முழுவதிலும் ஒப்புகைச்சீட்டு முறை அமலுக்கு வரவுள்ளது!

இதன்படி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் இம்முறையை அமலுக்கு கொண்டுவருவதால், யார் வெற்றி பெறுவர் என்று அனைவருக்கும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.