YouTube video

Gandhari Death Secret in Mahabharatham : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரம்மாண்ட சீரியல் மகாபாரதம். ஏற்கனவே ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரியல் தற்போது ஊரடங்கு காலத்தில் வேறு புதிய சீரியல்கள் இல்லாததால் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்த சீரியல் தான் உலக அளவில் பெரிதும் பார்க்கப்படும் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இந்த சீரியலில் பாண்டவர்கள் முடிசூடிய பின்னர் திருதராஷ்டிரர், காந்தாரி, குந்தி ஆகியோர் எப்படி இறந்தார்கள் என்பதெல்லாம் இடம் பெறவில்லை.

இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது பாண்டவர்கள் அஸ்தினாபுரத்தில் அரியணை ஏறிய பிறகு 17 வருடங்கள் ஆனதும் திருதராஷ்டிரன், காந்தாரி மற்றும் குந்தி ஆகியோர் வனவாசம் மேற்கொள்ள முடிவு செய்கின்றனர்.

மீண்டும் தொடங்கும் பொன்னியின் செல்வன் வெளியான அதிரடி அப்டேட்..!

உங்களது முடிவை அவர்களிடம் கூறி அவர்களிடம் சம்மதம் பெற்று காட்டை நோக்கி பயணிக்கின்றனர். இவர்களுடன் திருதராஷ்டிரருக்கு உதவியாக இருந்த சஞ்சயனும் செல்கிறார். கங்கை ஆற்றை ஒட்டியுள்ள ஒரு காட்டில் தங்களுக்கென ஒரு வீடு அமைத்து அதில் வாழ்ந்து வருகின்றனர்.

அன்றாடம் இந்த கங்கை ஆற்றில் நீராடி தங்களது மோட்சத்தை எண்ணி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான நிலையில் திடீரென ஒருநாள் இந்த காட்டில் காட்டு தீ கிடுகிடுவென பரவத் தொடங்குகிறது. இதனால் இவர்கள் மூவரும் தங்கள் மோட்சம் பெற இது தான் சரியான சந்தர்ப்பம் என கூறி அந்த காட்டுத்தீயில் தங்களது உயிரை மாய்த்துக் கொண்டு மோட்சம் பெறுகின்றனர்.

இவர்கள் மூவரின் மறைவிற்குப் பிறகு சஞ்சயன் இமயமலைக்குச் சென்று அங்கு மோட்சம் பெற்று விடுகிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகே பாண்டவர்களுக்கு தன்னுடைய அம்மா பெரியப்பா மற்றும் பெரியம்மா ஆகியோர் இறந்த தகவல் தெரிய வருகிறது.

இதனையடுத்து அவர்கள் இந்த காட்டுக்கு விரைந்து சென்று அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக சடங்குகளை செய்து முடிப்பதாக சில புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.