YouTube video

Corona Tests Details in Tamil Nadu : கடந்த வருடத்தின் இறுதியில் சீனாவின் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் இதுவரை 3,85,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,967 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இவர்களில் 3,650 ஆண்கள் 2,325 பெண்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 212 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 849 பேரும் இந்த எண்ணிக்கையில் அடங்குவர்.

இதுவரை தமிழகத்தில் 40 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது இந்தியாவிலேயே மிக மிக அதிகப்படியான பரிசோதனை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவிற்கு அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழக மருத்துவமனைகளில் கொடுக்கப்பட்டு வரும் தரமான சிகிச்சைகள் காரணமாக இதுவரை 3.25 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,129 ஆக பதிவாகி இருந்தது.

ஆரம்பத்தில் தமிழகத்தில் கொரானா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. அப்போது தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளிலும் மெத்தனமாக இருந்து விட்டது என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

மேலும் ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவனா பாதிப்பு குறைவாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்து வந்தனர். நாட்டிலேயே அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக தான் இருக்கும் என விளக்கம் அளித்தது.

இந்தியாவிலேயே முதலிடம்.. கொரானா பரிசோதனை மற்றும் சிகிச்சையில் தொடர் சாதனை படைக்கும் தமிழகம்!

இந்த நிலையில் தற்போது அதனை உறுதி செய்யும் வகையில் ஆரம்பத்தில் கொரானா பாதிப்பு குறைவாக இருந்த கேரளா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. ஆந்திராவில் நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் குறைந்த அளவில் கொரானா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது தான் காரணம் என்பது தற்போது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் தமிழக அரசு கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களைக் காக்க எந்த அளவிற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது உறுதியாகியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.