Teachers protest
Teachers protest

Teachers protest – சென்னை: இன்றைக்குள் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருவதால் குழந்தைகளுக்கு கல்வியும் , அரசு பணிகளும் வெகுவாக பாதிப்படைந்துள்ளன.

மேலும் தற்காலிக ஆசிரியர்களை அரசு பள்ளிகளில் பணியமர்த்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.,

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அறிக்கையை ஒன்றை வெளியிட்டார்.

ஆனால், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்றுக்குள் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் திரும்பாவிட்டால் அவர்களது பணியிடம் காலியானதாக அறிவிக்கப்படும் என்றும்.

மேலும் அந்த இடத்தில் அவர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என்றும் பள்ளிக் கல்வித் துறை அதிரடியாக தெரிவித்துள்ளது.