YouTube video

High Court Verdict on Medical Seats : மருத்துவ முதுநிலைப் பட்டப் படிப்பில் 50 சதவீதம் உள் ஒதுக்கீட்டை தமிழக மருத்துவர்களுக்கு வழங்கி வரும் முறை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய மருத்துவ குழுமம் முதுநிலை மருத்துவ ஒழுங்கு முறைகளை வெளியிட்டது. இது மாநில அரசின் உள் ஒதுக்கீட்டை தடுக்கும் விதத்தில் இருந்தது.

இதனால் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ அலுவலர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மூத்த வழக்கறிஞர்களை நியமித்து பழையபடி மாநில அரசின் உள் ஒதுக்கீட்டு உரிமையைப் பெறும் வகையில் சட்டரீதியாக போராடியது.

எடப்பாடியாரின் ஆட்சியில் புதிய மருத்துவக் கல்லூரிகள்: பயன்பெறும் தமிழக மாணவர்கள்

தமிழக அரசு தரப்பு வாதங்களை கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் 31.08.2020 அன்று மாநில அரசு மருத்துவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை வழங்குவது முதுநிலை மருத்துவ கல்வி ஒழுங்கு முறைகளுக்கு எதிரானது அல்ல. மாநில அரசுகள் தொடர்ந்து மருத்துவர்களுக்கு 50% சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.

ஊரகப் பகுதி மக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் முதுநிலைப் படிப்பிற்கான உள் ஒதுக்கீட்டை வழங்கும் முறையை தமிழக அரசு சட்ட ரீதியாக போராடி வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அம்மாவின் வழிவந்த அதிமுக அரசு தான் காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.