விஸ்வாசம் படம் பற்றி கேட்டதும் முகம் மாறிய யோகி பாபு - ஏன்? என்ன சொன்னார் தெரியுமா?

August 17, 2018


தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாக இருந்த நிலையில் படப்பிடிப்புகள் நிறைவடையாததால் படம் பொங்கலுக்கு தள்ளி போயுள்ளது.


viswasam
அஜித்துடன் நயன்தாரா, யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக், ரமேஷ் திலக், இம்மான் அண்ணாச்சி மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை விவேகம் படத்தை தயாரித்து இருந்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது.


இந்நிலையில் யோகி பாபு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கலகலப்பாக பேசி வந்துள்ளார். அப்போது அவரிடம் விஸ்வாசம் படம் பற்றி கேட்டதற்கு மௌனமாகி உள்ளார். சில நிமிடங்களுக்கு பின்னர் விஸ்வாசம் விசுவாசமாக உருவாகி வருகிறது.

தல அஜித் நல்ல மனிதர் சந்தோஷமாக இருக்கிறார், நானும் இந்த படத்தில் உற்சாகத்துடன் நடித்து வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.


viswasam