மினி பஸ்ஸில் பயணம் செய்து அடி உதை வாங்கிய யோகி பாபு.!

August 18, 2018


தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு தற்போது சர்கார், விஸ்வாசம் என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இவர் கதிரவன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் அவளுக்கென்ன அழகிய முகம் என்ற படத்தில் முழு நேர காமெடியனாக நடித்துள்ளார்.


yogi babu
இந்த படத்திற்காக யோகி பாபு மினி பஸ் ஒன்றில் பயணம் செய்யும் போது பொது மக்களால் அடி உதை வாங்கியது போன்ற காட்சி கோயம்பத்தூர் பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.


yogi babu

அப்போது இந்த காட்சியை பார்த்த அப்பகுதி மக்கள் யோகி பாபு உண்மையாகவே அடி வாங்குவதாக நினைத்து ஒன்று கூடியுள்ளனர். பின்னர் மக்களிடம் இது படக்காட்சி தான் என கூறி கூட்டத்தை கலைத்தது பெரும் சிரமாக இருந்ததாக படத்தின் இயக்குனர் கேசவன் கூறியுள்ளார்.


yogi babu