"ஏண்டா தலையில எண்ண வெக்கல" - திரை விமர்சனம்

February 23, 2018


அசார், சஞ்சிதா ஷெட்டி, சிங்கப்பூர் தீபன், ஈதள், யோகி பாபு, உமா பத்மநாபன், முத்துராமன், அர்ச்சனா, ஸ்ரீராம், மாயா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க, சுபா தம்பி பிள்ளை, யோகி தம்பி பிள்ளை தயாரிப்பில் "கிரிடிட் டைட்டில்ஸ்" எனும் பேனரில் ஏ.ஆர் ரெஹானா இசையில், விக்னேஷ் கார்த்திகின் எழுத்து இயக்கத்தில் வித்தியாசமான கதையம்சத்துடன் வந்திருக்கும் படம் தான் "ஏண்டா தலையில எண்ண வெக்கல...".

கதைப்படி, இன்ஜினியரிங் படித்திருந்தும், இங்கிலீஷையே தமிழில் பேசினால் தான் புரிந்து கொள்ளும் ஞான சூன்யங்கள்... நாயகர் அசாரும், அவரது நண்பர் சிங்கப்பூர் தீபனும். வேலை வெட்டித் தேடி ஐ.டி கம்பெனிகள் படி ஏறி இறங்கும் இவர்களில் ஹீரோ அசாருக்கு ஐ.டி அழகி சஞ்சிதா ஷெட்டியைக் கண்டதும் காதல். சஞ்சிதா ஷெட்டிக்கும் அதே, அதே.

இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் கல்யாணத்திற்கு சில நாட்களே இருக்கும் சமயத்தில் ஹீரோவுக்கு அசரீரி மாதிரி, நான் தான் எமன் பேசுகிறேன்.... என ஒரு அபசகுணவாய்ஸ் கேட்கிறது. இன்னும் நான்கு நாட்களில், "நீ சாகப்போகிறாய்....." அது நடக்கக்கூடா தென்றால் நான் சொல்லும் டாஸ்க்கை எல்லாம் நீ செய்தாக வேண்டும்..... என்கிறது.

நாயகர் அசார், அந்த வாய்ஸ் சொன்ன கடினமான டாஸ்க்குகளை எல்லாம் செய்தாரா? உயிர் பிழைத்தாரா..? சஞ்சிதாவை கரம் பிடித்தாரா...? இல்லையா....? என்பது தான் "ஏண்டா தலையில எண்ண வெக்கல... ". படத்தின் மீதிக் கதையும் களமும்!


yenda thalaiyila yenna vekkala tamil review
Yenda Thalaiyila Yenna Vekkala Movie Tamil Review


இன்ஜினியரிங் படித்திருந்தும், இங்கிலீஷையே தமிழில் பேசினால் மட்டுமே புரிந்து கொள்ளும் ஞான சூன்யமாக... நாயகர் அசார் கச்சிதம், வேலை வெட்டித் தேடி இவர் பண்ணும் அலப்பறையில் தொடங்கி, டாஸ்க் கட்டளைக்கு பயந்து இவர் பண்ணும் கலாட்டாக் கள் வரை சகலமும் ரசனை.

நாயகியாக ஐ.டி அழகியாக சஞ்சிதா ஷெட்டி, யூத்துக்கு ஏற்றதாய் படம் முழுக்க பூத்து குலுங்குகிறார். நாயகரின் காமெடி நண்பர் சிங்கப்பூர் தீபனும். வேலை வெட்டி இல்லாத வாலிபராக பல இடங்களில் காமெடியாக கவருகிறார்.

மற்றொரு நாயகியாக மந்திரி மகளாக ஈதள், டி.வி.ரிப்பேர் என்றாலே அலறும் யோகி பாபு, நாயகரின் அம்மா உமா பத்மநாபன், அப்பா முத்துராமன், யோகியின் கள்ள ஜோடி அர்ச்சனா, ஸ்ரீராம், மாயா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் மொத்த பேரும் கச்சிதம்.


Yenda Thalaiyila Yenna Vekkala Movie English Review


சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பில் முன் பாதியைக் காட்டிலும் பின் யாதி ஹாசம்! வம்சிதரன் முகுந்தனின் ஒளிப்பதிவு ஓவியப்பதிவு, ஏ.ஆர் ரெஹானா இசையில், "இமைக்காமல் கண்கள் நின்றது...", "மனது தாயின்..." ஆகிய பாடல்கள் மெலடி ட்ரீட்.

விக்னேஷ் கார்த்திக், தனது, எழுத்து இயக்கத்தில் "லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்னு சொன்னது படிக்கிற நம்மை அல்ல..... நம்மை வைத்து காலேஜ் நடத்துறவனுங்க ....", "4 முறை தற்கொலை செய்தும் தப்பிச்சுட்டேன்னா.... எமனுக்கே உன் மூஞ்சி பிடிக்கலைன்னுதானே அர்த்தம்...." , "சாகனும் முடிவு செய்தவ, அப்புறம் ஏன் ஆயுத பூஜைக்கு மாலை போட்ட லாரி மாதிரி இவ்ளோ அலங்காரம்?" என்பது உள்ளிட்ட காமெடி டயலாக்குகள் வாயிலாகவும், சில பல காமநெடி டயலாக்குகள் வாயிலாகவும், யோகிபாபுவின் ஒற்றை காமெடி காட்சி வாயிலாகவும் யூத் தரப்பு ரசிகர்களை பெரிதும் சுவர்ந்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

மொத்தத்தில், "ஏண்டா தலையில எண்ண வெக்கல... ' - 'ரசிகர் தலையில் கை வைக்கலை.. 'ஒரு மாதிரி அழகாக, நெஞ்சைத் தொட்டிருக்கிறது!"