மெர்சல் படத்திற்கு போட்டியாக வருமா விக்ரம் படம் ? அதிகாரப்பூர்வ தகவல்

September 13, 2017


தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் மெர்சல் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.


mersal
Will Vikram to compete with Mersal? Official information


இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படம் தீபாவளிக்கு கோலாகலமாக ரிலீஸ் ஆக உள்ளது.


மேலும் இந்த படத்துடன் சில பெரிய படங்களும் மோத உள்ளன, அந்த வரிசையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஸ்கெட்ச் படம் மெர்சலுக்கு போட்டியாக தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் இச்செய்தியை ஸ்கெட்ச் பட இயக்குனர் விஜய் சந்தர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இது குறித்து இயக்குனர் கூறுகையில், ஸ்கெட்ச் படத்தினை டிசம்பர் மாதம் வெளியிட தான் நாங்கள் முடிவு செய்துள்ளோம், விரைவில் படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.