அரசின் அதிரடி உத்தரவால் அமலாபால் கைதா? - அதிர்ச்சி தகவல்கள்.!

அரசின் அதிரடி உத்தரவால் அமலாபால் கைதா? - அதிர்ச்சி தகவல்கள்.!

November 15, 2017


தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வரும் அமலாபால் கடந்த மாதம் 1 கோடிக்கும் அதிகமான விலையில் சொகுசு கார் ஒன்றகி வாங்கி இருந்தார்.


amalapaul



இந்த காரை போலி ஆவணங்கள் மூலம் புதுசேரியில் பதிவு செய்துள்ளதாக புகார்கள் எழுந்து இருந்தன, இது பற்றி விசாரணை நடத்த எர்னாகுளம் போக்குவரத்து துறை அதிகாரிகள் அமலபாலுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.


ஆனால் அமலாபால் ஆஜர் ஆகாமல் அவரது வக்கீல் ஆஜராகி அவரது ஆவணங்களை சமர்பித்தார். இதில் புதுசேரியில் பதிவு செய்த முகவரி மட்டும் போலியானது என தெரிய வந்தது.


இதனையடுத்து மீண்டும் அமலபாலுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பி உள்ளனர், ஆனால் அமலாபால் நேரில் ஆஜராகததால் அவரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த போக்குவரத்து துறை ஆணையர் அணில்காந்த் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு பதிவு செய்தால் அமலாபாலை கைது செய்யவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.