ஏன் இப்படி? சர்கார் பர்ஸ்ட் லுக் ரிலீஸில் அஜித் ரசிகர்களை சீண்டிய நடிகை.!

June 22, 2018


ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வளையதள பக்கங்களிலும் தளபதியின் சர்கார் பற்றிய பேச்சு தான். நேற்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


sarkar
கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மி சரத்குமார், ராதா ரவி, பழ.கருப்பையா மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். பர்ஸ்ட் லுக் ரிலீஸான உடன் பலரும் போஸ்டரை தங்களது பக்கங்களில் ஷேர் செய்து ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.


அப்போது வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சர்கார் போஸ்டரை பதிவிட்டு தெறிக்க விடலாமா? என ட்வீட் செய்துள்ளார். இது வேதாளம் படத்தில் இடம் பெற்றிருந்த அஜித்தின் வசனம் என்பதால் அஜித் ரசிகர்களை சீண்டி பார்க்கவே இவ்வாறு செய்திருப்பதாக கூறி வருகின்றனர்.


sarkar