போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்க ஒப்பு கொண்டது ஏன்? - வெளிவந்த அதிரடி காரணம்.!

March 14, 2018


தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்தியா சினிமா உலகையே வலம் வந்தவர் ஸ்ரீ தேவி, இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்தவர். இவரது மரணம் இந்திய திரையுலகில் மிக பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது.


boni kaboor
சமீபத்தில் சென்னையில் ஸ்ரீ தேவிக்கு 16-வது நாள் சடங்கு நடை பெற்றது. இந்த சடங்கில் முதல் ஆளாக அஜித்தும் ஷாலினியும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


இதனையடுத்து தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன, அதற்கான காரணம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.


ஸ்ரீ தேவியின் குடும்பம் தற்போது கடும் பண நெருக்கடியில் உள்ளதாம். அதற்காக அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். மேலும் தன்னுடைய சம்பளத்தையும் அதிகம் குறைத்து கொண்டதாக கூறப்படுகிறது.