தளபதி-62 படம் என்னாச்சு? நிலை என்ன? - வெளியான சூப்பர் தகவல்.!

November 21, 2017


தளபதி விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியாகி இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் 5-வது வாரத்தை கடந்து மாஸான வசூலுடன் வெற்றி நடை போட்டு வருகிறது.


thalapathy 62
இந்த படத்தை அடுத்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் கதையின் இறுதி கட்ட விவாதம் பெங்களூரில் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் தொடங்கும் எனவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. இதனால் தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.