சூர்யா ஷுட்டிங் பாதியில் நிறுத்தம் - படப்பிடிப்பில் வாக்குவாதம் என்ன நடந்தது?

சூர்யா ஷுட்டிங் பாதியில் நிறுத்தம் - படப்பிடிப்பில் வாக்குவாதம் என்ன நடந்தது?

October 11, 2017


நானும் ரௌவுடிதான் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் படம் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஷுட்டிங்கிற்காக படக்குழுவினர் திருவையாறு காவிரி கரையில் முன் அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்தினர்.


suriya



What happened in the Suriya Movie shooting


அப்போது அப்பகுதியை சேர்த்த புரோகிதர்கள் காலையில் முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்வை நடத்தி வந்தனர். ஆனால் அதன் பிறகு வந்த படக்குழுவினர் சூர்யா மற்றும் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களோடு பாடலுக்கு ஆடுவதை போன்று ஷூட்டிங் எடுத்து கொண்டு இருந்தார்களாம்.

அதிகம் கூட்டத்தை கருதி அப்பகுதியில் திதி கொடுக்க வந்தவர்களை படக்குழுவினர் அனுமதிக்க வில்லையாம். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடன் புரோகிதர்கள் தங்கள் சங்கத்தின் மூலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

உடனே அங்கு விரைந்து வந்த போலிசார் பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஷூட்டிங் நடத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி பிறகு ஷுட்டிங் தாமதமாக நடைபெற்றது.









Latest