இது தான் விஸ்வாசம் கதையா? லீக்கான கதையால் ஷாக்கான ரசிகர்கள்.!

May 21, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.


thala
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க ரோபோ ஷங்கர், யோகி பாபு, விஜய் வசந்த், மற்றும் பல நடிகர் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.


முதற்கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் விஸ்வாசம் கதை இது தான் என சமுக வளையதள பக்கங்களில் ஒரு கதை வைரலாகி வருகிறது.


thala

அதாவது இந்த படத்தில் அஜித் அண்ணன், தம்பி என இரண்டு கெட்டப்களில் நடிப்பதாகவும் அண்ணன் அஜித் தன்னுடைய தம்பியை பார்ப்பதற்காக சிறையில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறாராம். அப்போது அங்கு தம்பி அஜித் எதிரிகளால் கொல்லப்படுவதாகவும் அதனால் அண்ணன் அஜித் அவர்களை பழி வாங்குவதும் தான் கதை என கூறப்படுகிறது.

அதே சமயம் இந்த படத்தின் நியூட்ரோ அபாயம் குறித்த சமூக பிரச்சனை பற்றியும் பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும் விஸ்வாசம் பக்கா கிராமத்து கதையாகவும் மாஸான கமெர்சியல் படமாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Latest