விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!

March 14, 2018


தமிழ் சினிமாவின் மெகா ஹிட் நடிகர்களாக விளங்கி வருபவர் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்களை பற்றிய எந்தவொரு தகவலாக இருந்தாலும் ரசிகர்கள் அதை கொண்டாடாமல் இருக்க மாட்டார்கள்.


viswasam
இந்நிலையில் தற்போது அப்படி தான் ஒரே நேரத்தில் இரு தரப்பு ரசிகர்களும் கொண்டாடத்தை தொடங்கியுள்ளனர். தல அஜித்தின் விவேகம் படம் மலேசியாவில் மீண்டும் ரி-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனை தல ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகின்றனர்.


இதே வேளையில் தளபதி ரசிகர்கள் விஜயின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை தற்போதே ஆரம்பித்து விட்டனர். விஜயின் பிறந்த நாளுக்கு இன்னும் 100 நாட்களே உள்ளதால் SAMRAT VIJAY BDAY IN 100D என டேக் உருவாக்கியுள்ளார்கள். இந்த இரண்டு ஹேஸ்டேக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.