அஜித்தை போல பல தடைகளை உடைத்து முன்னேறிய விக்ரம் - வெளிவராத உண்மைகள்.!

April 17, 2018


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய், சீயான் விக்ரம் என பல உள்ளனர். தல அஜித் பல தடைகளையும் சோதனையும் தாண்டி தான் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.


ajith
ஆனால் அஜித்தை விட பல மடங்கு வலிகளையும் சோதனைகளையும் கடந்து வந்தவர் சீயான், ஆனால் இது குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


ajith

தன்னை ஒரு நல்ல நடிகனாக உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக 16 வருடங்கள் தவமிருந்தவர். பின்னர் எதிர்பாராத விபத்து ஒன்றால் கடுமையான பாதிப்பு ஆளாகினார்.


இனி எழுந்து கூட நடக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட விக்ரம் கடுமையான முயற்சிகளுக்கு பிறகு பாலாவின் சேது படம் அவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது.

ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு விதமான ஸ்டைல், மாறுபட்ட நடிப்பு என கலங்கி இன்று மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளார் என்றால் அது மிகையாகாது.

இன்று சீயான் விக்ரம் தன்னுடைய 52-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர். சியான் அவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் அடுத்தடுத்து புதுப்புது சாதனை படைக்கவும் கலக்கல் சினிமாவின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.