செம மாஸாக வெளியான செக்க சிவந்த வானம் விஜய் சேதுபதி கெட்டப்.!

August 15, 2018


லைகா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் செக்க சிவந்த வானம். செப்டம்பர் 19-ல் வெளியாக உள்ள இந்த படத்தில் சிம்பு, அரவிந் சாமி, விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜய் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.


chekka chivantha vaanam
அதேபோல் ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் ஆகியோரும் முக்கியமான காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த இரு தினங்களாக இந்த படத்தின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. அரவிந் சாமி வரதன் கதாபாத்திரத்திலும் அருண் விஜய் தியாகு என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பதாக போஸ்டர்கள் வெளியாகி இருந்தன.


இதனையடுத்து தற்போது விஜய் சேதுபதி ரசூல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக போஸ்டர் வெளியாகியுள்ளது. செம மாஸாக வெளியாகியுள்ள இந்த போஸ்டரை விஜய் சேதுபதி ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.


chekka chivantha vaanam