கேரளாவுக்காக விஜய் சேதுபதி கொடுத்த தொகை, மிரண்டு போன திரையுலகம்.!

August 17, 2018


கேரள மாநிலத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால் கேரளாவே ஸ்தம்பித்து போயுள்ளது. போக்குவரத்து, ரயில் சேவை, விமான சேவை என ஒட்டு மொத்த போக்குவரத்து சேவையும் முடங்கி போயுள்ளது.


kerala
பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கேரள மக்களுக்காக நிதியுதவி அளித்து வருகின்றனர்.


சிவகார்த்திகேயன், கமல்ஹாசன், தனுஷ், விஷால், சித்தார்த் என பலர் நன்கொடைகளை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி ரூ 25 லட்சம் நிதிஉதவி அளித்திருப்பதாக மலையாள செய்தி சேனல் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.


kerala

கமல்ஹாசன், சூர்யா, கார்த்திக்கு அடுத்ததாக விஜய் சேதுபதி தான் ரூ 25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.