விஜய் பிறந்த நாளில் ரசிகர்கள் செய்த மோசமான செயல் - வெளிவந்த வீடியோவால் பரபரப்பு.!

June 23, 2018


தளபதி விஜய் நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடினார். இதனால் ரசிகர்களும் உற்சாகத்தின் உச்சத்திற்கே சென்று கொண்டாடினார்கள், இதனால் இரண்டு நாட்கள் முழுவதும் தளபதி விஜயை பற்றிய ஹேஸ்டேக்குகள் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் நிலைத்து இருந்தன.


thalapathy
சென்னையில் உள்ள பல தியேட்டர்களிலும் தளபதி விஜயின் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். ஆனால் இதை சில ரசிகர்கள் தவறாக பயன்படுத்தி கொண்டு செய்த செயல்கள் மற்ற தளபதி ரசிகர்களை வருத்தப்பட வைத்துள்ளது.


சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகினி தியேட்டரில் தளபதி ரசிகர்கள் சிலர் அங்கிருந்த சூப்பர் ஸ்டாரின் காலா படத்தின் பேனரை கிழித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோவை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் வெளியிட ரோகினி தியேட்டர் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.


thalapathy