அட்லீயுடன் துபாய்க்கு விரைந்த விஜய் - மெர்சல்2 தான் காரணமா?

November 14, 2017


தளபதி விஜயின் நடிப்பில் அட்லீ இயக்க ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து இருந்த மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

விஜயின் திரைப் பயண வரலாற்றுலேயே மெர்சல் தான் அதிக வசூல் செய்த படம்.


atlee
Vijay and Mersal


இதனால் ரசிகர்கள் அனைவரும் மெர்சல் 2 உருவாக வேண்டும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது விஜய், அட்லீ மற்றும் ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஆகியோர் துபாய்க்கு சென்றுள்ளனர். இதனால் ரசிகர்கள் மெர்சல் 2 டிஸ்கஷனா? என்ற குழப்பத்தில் இருந்தனர். ஆனால் மெர்சல் வெற்றியை கொண்டாட தான் துபாய் சென்றுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.