விஜயின் இந்த நிலைக்கு இவர் தான் காரணம், இவர் இல்லைனா - எஸ்.ஏ.சி ஓபன் டாக்.!

April 16, 2018


இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய படங்கள் அனைத்துமே இன்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. விஜயின் இந்த அபார வளர்ச்சிக்கு என்ன காரணம் என்பதை பற்றி இயக்குனரும் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.


vijay
விஜயகாந்த் திரையுலகிற்கு வந்து 40 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி கலந்து கொண்டு பேசினார். விஜயகாந்த் தான் என் உயிர் மூச்சு. நட்பு, அன்பு, மரியாதை என எதுவாக இருந்தாலும் அதற்கு கேப்டன் தான் உதாரணம்.


vijay

அன்றில் இருந்து இன்று வரை விஜயகாந்த் மாறாமல் அப்படியே அதே குணத்துடன் தான் இருக்கார். விஜயின் நடிப்பிற்கு மிக பெரிய அச்சாரமே விஜயகாந்த் தான். விஜயை எப்படியாச்சும் நடிகனாக்கி விட வேண்டுமென ஆசைப்பட்டேன். நாளைய தீர்ப்பு படம் சரியாக ஓடவில்லை.


அதன் பிறகு செந்தூரப்பூவே படத்தில் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்தார். உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அடுத்த வருடம் நாம் மீண்டும் ஒரு படம் பண்ணுவோம். அதற்கு கலைப்புலி எஸ் தாணு தான் தயாரிப்பாளர் என கூறியுள்ளார்.