விஜய்க்கு ஓகே என்றால் அப்படியொரு வேடத்திலும் நடிக்க தயார் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!

December 7, 2017


தளபதி விஜய், தல அஜித் போன்றவர்கள் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விளங்கி வருகிறார்கள், இவர்களுடன் நடிக்க பெரும்பாலும் அனைத்து நடிகர் நடிகைகளுக்கும் ஆசை இருக்கும், இதனை பலரும் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.


thalapathy
சிபிராஜ், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி உள்ள சத்யா படம் நாளை முதல் உலகமெங்கும் திரைக்கு வர உள்ளது, இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிபிராஜிடம் தளபதி விஜய் பற்றி கேட்கப்பட்டுள்ளது.


அப்போது எனக்கும் தளபதி விஜயுடன் நடிக்க ஆசை உண்டு என கூறியுள்ளார், மேலும் அவருடைய படத்தில் வில்லனாக கூட நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.


மேலும் எனக்கும் இப்படியான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் உள்ளது, ஆனால் அவையெல்லாம் விஜய் படத்தில் மட்டும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
Latest