கொளுத்த தொடங்கிய வெயில் , களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!

March 13, 2018


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய ரசிகர்கள் வறுமையில் வாடும் மக்களுக்காக தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.


thalapathy
தற்போதும் இவர்கள் அப்படி தான் மீண்டும் களத்தில் குதித்துள்ளனர். கோடை வெயில் தமிழகம் எங்கும் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. இப்போதே பல இடங்களில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்போது மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள விஜய் ரசிகர்கள் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதனால் அந்த பகுதி மக்கள் விஜய் ரசிகர்களை பாராட்டி வருகின்றனர்.