பைரவாவால் விஷம் குடித்த விஜய் ரசிகர் - அதிர்ச்சி தகவல்! - Kalakkal Cinema

பைரவாவால் விஷம் குடித்த விஜய் ரசிகர் - அதிர்ச்சி தகவல்!

January 12, 2017kalakkalcinema.comvijay-illayathalapthy-in-Bairavaa-movie-12

தெறி வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் படம் பைரவா. வெளியான கொஞ்ச நேரத்திலேயே படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.


கடந்த வாரம்வரை கேரளாவில் இப்படம் ரிலீஸாகுமா ஆகாதா என குழப்பம் நீடித்தது. ஆனால் ஒருவழியாக பிரச்சனை முடிந்து படம் கேரளாவில் ரிலீஸாகியுள்ளது. ஆனால் படம் வெளியாகுமா ஆகாதா என்கிற கவலையில் ரசிகர் ஒருவர் விஷம் குடித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது வெறும் வதந்தி எனவும் ஒரு
தரப்பில் சொல்லப்படுகிறது.