எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் படத்தில் சிறப்பு வேடத்தில் விஜய் – உறுதி செய்த இயக்குனர்.!

November 15, 2017


தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது டிராபிக் ராமசாமி வாழ்க்கை வரலாற்று கதையில் நடித்து வருகிறார் என்பது நான் அனைவரும் அறிந்தது தான்.


s.a.chandrasekar
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரோஹினியும், வில்லனாக ஆர்.கே.சுரேஷும் நடித்து வருகின்றனர், இந்நிலையில் தற்போது இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி சிறப்பு வேடத்தில் நடிக்க இருப்பதாக இந்த படத்தின் இயக்குனர் விஜய் விக்ரம் கூறியுள்ளார்.


மேலும் இதில் விஜய் ஆண்டனி அவராகவே நடிக்க உள்ளாராம், இவருடைய கதாபாத்திரம் படத்திற்கு திருப்பு முனையாக அமையும் விதத்தில் அமைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக “சுக்ரன்” படத்தின் மூலமாக எஸ்.ஏ.சி திரையுலகிற்கு அறிமுகபடுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.