விக்ரம் முயற்சியால் மீண்டும் சாமி-2ல் திரிஷா மாமியா? - குஷியில் ரசிகர்கள்.!

November 15, 2017


இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த சாமி படம் ரசிகர்களின் பிரம்மாண்ட வரவேற்பால் தற்போது சாமி-2 உருவாகி வருகிறது.


sami2
இந்த படத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், திரிஷா ஆகியோர் நடிக்க இருந்தனர், திரிஷாவிற்கு படத்தில் முக்கியத்துவம் இல்லாததால் தான் சாமி-2ல் இருந்து விலகி கொள்வதாக அறிவித்து இருந்தார்.


அந்த நேரத்தில் விக்ரமும் தன்னுடைய மகளின் திருமணத்தில் பிஸியாக இருந்தார், இதனையடுத்து தற்போது திரிஷாவை நேரில் சந்தித்து அவரை சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.


இதனால் திரிஷா மீண்டும் சாமி-2 படத்தில் நடிக்க ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன, மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Latest