வெர்ஜின் பசங்க கூட்டணியில் உருவாகும் திரிஷா இல்லனா நயன்தாரா-2?

November 15, 2017


சமீபத்தில் கெளதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருந்த ஹரஹர மகா தேவகி என்ற அடலன்ட் காமெடி படம் நல்ல வசூலை வாரி குவித்து வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு முன்னதாகவே ஆதிக் ரவிச்சந்திரன் ஜி.வி பிரகாஷ் கூட்டணில் அடலன்ட் காமெடி படமாக திரிஷா இல்லனா நயன்தாரா வெளியாகி வசூலை வாரி குவித்தது.


adhik ravichandhiran
இதனையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் சிம்புவை வைத்து AAA படத்தை எடுத்து இருந்தார், இந்த படம் இரண்டு பாகமாக உருவாகுவதாகவும் கூறப்பட்டது, ஆனால் முதல் பாகமே தோல்வியை சந்தித்ததால் இரண்டாம் பாகம் கிளப்பில் போடப்பட்டு விட்டது.


இந்நிலையில் தற்போது ஆதிக் மீண்டும் ஜி.வியுடனே இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளதாகவும் இந்த படத்தை 3டி தொழில் நுட்பத்தில் லவ் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாக்க முடிவு செய்துள்ளனர்.


அரண்மனை படத்தை தயாரித்த விஷன் மீடியா தினேஷ் கார்த்திக் தயாரிக்கும இந்த படத்தில் சோனியா அகர்வாலும் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.