16ம் தேதி முதல் படங்களை ஓட்டுவோம் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிப்பு!

March 14, 2018


சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தமிழ்நாடு மல்ட்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது.


theater owners council
இன்று நடைபெற்ற கூட்டத்தில் 147 திரை அரங்க உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், " மார்ச் மாதம் 16 முதல் திரையரங்குகளை மூடமாட்டோம். ஸ்ட்ரைக்கில் கலந்து கொள்ள மாட்டோம்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், ஆங்கிலம் என எந்த மொழி படமாக இருந்தாலும் பொது மக்களின் பொழுது போக்கிற்காக திரையிட தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம், என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அபிராமி ராமநாதன்,

தலைவர்,

சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்.