விவேகத்தின் அந்த காட்சியை ஒளிபரப்பவே பயப்படும் திரையரங்க உரிமையாளர்கள்.!

விவேகத்தின் அந்த காட்சியை ஒளிபரப்பவே பயப்படும் திரையரங்க உரிமையாளர்கள்.!

August 12, 2017


தமிழ் சினிமாவில் மிக பெரிய நடிகர்களின் படம் என்றால் எப்போதும் ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பு தான், அதுவும் தல, தளபதி படங்கள் என்றால் சொல்லவா வேணும், கொண்டாடத்திற்கு எல்லைகள் இல்லாமல் கொண்டாடுவார்கள்.


vivegamசமீபத்தில் வெளியான தனுஷின் VIP-2 படத்திற்கான பிரபல திரையரங்குகளில் விடியற்காலை காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, ஆனால் அவை சில காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் போய் விட்டது.


இவ்வாறு தொடர்ச்சியாக சில படங்களின் விடியற்காலை காட்சிகள் ரத்தானதால் பிரபல திரையரங்க உரிமையாளர்கள் விவேகம் படத்திற்கு விடியற்காலை காட்சிகளை ஏற்பாடு செய்யவே பயப்படுவதாக பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.