ஆணவக்கொலை பற்றிய கதை புதுமுகங்களின் அணிவகுப்பில் " குட்டி தேவதை"

August 10, 2018


ஜெய்சக்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள படம் தான் " குட்டி தேவதை". இதில் சோழவேந்தன் கதாநாயகனாகவும், தேஜாரெட்டி கதாநாயகியாகவும், இன்னொரு கதாபாத்திரத்தில் அறிவரசும் அறிமுகமாகின்றனர். மேலும் இதில், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, வாசுவிக்ரம், காயத்ரி, சத்யஜித், ராஸ்மி, டாக்டர் சங்கர்கணேஷ் இவர்களுடன் குழந்தை நட்சத்திரம் சவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.


kutty devathai
பல முன்னணி இயக்குனர்களிடம் வெற்றிப் படங்களில் பணியாற்றிய கே. அலெக்சாண்டர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார். படத்தைப் பற்றி அவர் கூறுகையில், " நாம் 21ஆம் நூற்றாண்டிற்கு வந்த பின்னும் சாதிக்கொடுமைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. சாதி விட்டு வேறொரு சாதியில் திருமணம் புரியும் காதலர்களுக்கு இன்னமும் பாதுகாப்பும்இல்லை. சமூகம் வாழவிடுவதும் இல்லை.


அப்படி ஒரு கிராமத்தில் சாதி விட்டு சாதி திருமணம் புரிந்த காதலர்களை பஞ்சாயத்து தலைவர் ஆணவக்கொலை நடத்த ஆயத்தமாகிறார். ஊர் பரபரப்பாகிறது. ஆணவக்கொலை நடைபெற்றதா? தப்பித்தார்களா? என்பதை மண்ணின் மனம் மாறாமல் விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லி இருக்கிறேன்.


kutty devathai

சமீபத்தில் கோவையில் கூட அப்படி ஒரு ஆணவக்கொலை நடைபெற்றது. அந்த சம்பவம் தான் இந்த படம் பண்ணுவதற்கு தூண்டுகோலாக இருந்தது ". என்று கூறினார்.

மு. மேத்தா, பிறைசூடன் ஆகியோருடன் பாடல் ஒன்றை எழுதிஅமுதபாரதி இசையையும், நெளசத்- சூரியன் இருவரும் ஒளிப்பதிவையும், லான்சி - மோகன் இருவரும் படத்தொகுப்பையும், சதீஷ் நடனபயிற்சியையும், ஸ்பீடுமோகன் சண்டைபயிற்சியையும், சந்தோஷ் கலையையும், ஆறுமுகம் - கார்த்திக் ராஜ் இருவரும் தயாரிப்புநிர்வாகத்தையும் சி. செல்லன் தயாரிப்பு மேற்பார்வையையும்,கவனிக்கின்றனர்.

ராணியம்மாள்ராஜா, ராஜம்மாள்செல்லன், அனிதாஸ்டாலின், யோகவிக்னேஷ்வர் நால்வரும் இணைதயாரிப்பையும், பி. அறிவரசன் தயாரிப்பு பொறுப்பையும் ஏற்றுள்ளனர்.

படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. விரைவில் திரைக்கு வர இருக்கும் " குட்டி தேவதை" படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை கே. அலெக்சாண்டர் கவனித்துள்ளார்.
Latest