தளபதி-62 சண்டை காட்சி லீக், அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர் - ஆவேசமான ரசிகர்கள்.!

February 13, 2018


தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி-62 என்ற பெயரிடப்படாத படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.


rajini




இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. சமீபத்தில் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள காலா படத்தின் சண்டை காட்சிகள் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.


இதனையடுத்து தற்போது இந்த சோதனை தளபதி விஜயின் படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. விஜய் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஸ்டண்ட் நடிகர்களுடன் சண்டை போடும் காட்சி வெளியாகி ரசிகர்களை மட்டுமில்லாமல் படக்குழுவினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தியும் இது எப்படி நடந்தது என முருகதாஸ் மற்றும் படக்குழுவினர் கடும் அப்செட்டாகி உள்ளனர்.








Latest