இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற போகும் பிரபலம் - ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.!

August 11, 2018


கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்து வருகிறது.


bigg boss
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வார வெளியேற்றத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் சென்றாயன், பொன்னம்பலம், ஜனனி ஐயர் என மூவர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.


இதுவரை நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி சென்ராயன் அதிக ஓட்டுகள் பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் ஜனனி மற்றும் பொன்னம்பலம் ஆகிய இருவரும் குறைவான ஓட்டுகள் பெற்றிருப்பதாகவும் இவர்களில் ஒருவர் தான் வெளியேற இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.


bigg boss

இவர்களில் வெளியேறப்போவது யாராக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஜனனி மற்றும் பொன்னம்பலம் என இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகமாகவே இருந்து வருகிறது. இவர்களில் யார் வெளியேறினாலும் அது ரசிகர்களுக்கு வருத்தமாக இருக்கும்.