பிரபல நடிகருடன் அறம் இயக்குனரின் அடுத்த படம் - வெளியான தகவல்.!

July 11, 2018


தமிழ் சினிமாவில் அறம் படத்தின் மூலம் இயக்குநராகி அறிமுகமாகி ஒரு படத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் கோபி நாயனார்.


aramm
அறம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தையே இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருந்தன. ஆனால் தற்போது உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது.


ஆம், கோபி நாயனார் அடுத்ததாக அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதில்லையாம், பிரபல நடிகரான ஆர்யாவை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.


aramm

மேலும் இந்த படத்தில் நடிகர் ஆர்யா, வட நாட்டை சேர்ந்த பாக்ஸர் ரோலில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.