விஸ்வாசம் படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் - ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.!

August 10, 2018


தல அஜித் தற்போது விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் சிவாவுடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்க யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், விவேக் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.


viswasam
அஜித் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் படமாக்கப்பட்டு வருகிறது. கலைஞருக்காக அஞ்சலி செலுத்த வந்த அஜித் மீண்டும் தற்போது விஸ்வாசம் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.


வயதான அஜித்திற்காக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஸ்டண்ட் மாஸ்டரான திலீப் சுப்புராயன் இந்த படத்திற்கு ஸ்டண்ட் பணிகளை கவனித்து வருகிறார். சமீபத்தில் வயதான அஜித்திற்கான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.


viswasam

அதுவும் இந்த சண்டை காட்சிகள் அஜித்திற்கு மிகவும் பிடித்த வகையில் அமைந்து இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.