ஜோக்கர் நாயகன் நடிப்பில் ஆகஸ்ட் 17-ல் வெளியாகும் ஓடு ராஜா ஓடு.!

August 10, 2018


தமிழ் சினிமாவில் வெளியாகி மெகா வரவேற்ப்பை பெற்ற படம் ஜோக்கர். இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் குரு சோமசுந்தரம். இவர் தற்போது ஜதின் மற்றும் நிஷாந்த் ஆகியோரின் இயக்கத்தில் விஜய் மூலன் அவர்களின் தயாரிப்பில் உருவாகி வரும் ஓடு ராஜா ஓடு என்ற காமெடி திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இது Dark Humour கதையாக இருக்கும் எனவும் கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன.


joker
இந்த ஆகஸ்ட் 17-ல் உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழு விவரங்கள் இதோ


நாசர், குறும்படங்களில் நடித்த லட்சுமி பிரியா, ஆனந்த் சாமி, ஆஷிகா சால்வன், வினோத், ரவீந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், கே.எஸ்.அபிஷேக், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் மற்றும் தீபக் பாகா.


தொழில் நுட்ப கலைஞர்கள்:

திரைக்கதை: நிஷாந்த் ரவீந்திரன்

தயாரிப்பாளர்: விஜய் மூலன்

தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம்: விஜய் மூலன் டால்கீஸ் மற்றும் கேண்டில் லைட் ப்ரொடக்ஷன்ஸ்

போட்டோ கிராபர்: ஜதின் சங்கர் ராஜ் (இயக்குனர்), சுனில் சி.கே

எடிட்டிங்: நிஷாந்த் ரவீந்திரன் (இயக்குனர்)

மியூசிக்: தோஷ் நந்தா

ஒலி: விஜய் ரத்தினம், ஏ.எம் ரஹ்மத்துல்லா

ஜோக்கர் படத்தை அடுத்து இந்த படமும் குரு சோமா சுந்தரத்திற்க்கு மிக பெரிய வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.