முருகதாஸை தொடர்ந்து ஸ்ரீ லீக்சில் சிக்கிய பிரபல நடிகர் - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

July 12, 2018


தெலுங்கு சினிமாவில் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் ஆகியோர் தன்னை வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக ஆதாரங்களை வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பி இருந்தவர் ஸ்ரீ ரெட்டி. இவரால் தெலுங்கு திரையுலகமே ஒரு ஆட்டம் கண்டு விட்டது என்றே கூறலாம்.


armurugadoss
இதனையடுத்து தற்போது தமிழ் சினிமாவை குறி வைக்க தொடங்கியுள்ளார். தமிழ் சினிமாவால் முதல் ஆளாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கி இருந்தார். முருகதாஸ் ஜி உங்களுக்கு க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கா? நமக்குள்ள நிறைய என சூசமாக பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.


இதனை தொடர்ந்து அடுத்த ஆளாக பிரபல நடிகரான ஸ்ரீ காந்த் பற்றி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். நீங்களும் நானும் ஹைதராபாத்தில் உள்ள பார்க் ஹோட்டலில் ஒன்றாக நடனமாடிய போது வாய்ப்பு வாங்கி தருவதாக சொன்னீங்களே நினைவிருக்கா என கேட்டது மட்டுமில்லாமல் #TamilLeaks எனவும் பதிவிட்டுள்ளார்.


armurugadoss

மேலும் இனி தமிழ் சினிமா பிரபலங்கள் ஒவ்வொருவராக சிக்குவார்கள் எனவும் தன்னுடைய பதிவில் மறைமுகமாக பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளார். அடுத்தடுத்து ஸ்ரீ ரெட்டி விஜய் பட பிரபலங்களை பற்றியே பகீர் தகவலை வெளியிட்டு வருகிறார் என்பது மேலும் ஓர் அதிர்ச்சி செய்தி.