மெர்சல் வடிவேலுக்கு விஜய் கொடுத்த அட்வைஸ் - அசந்து போய்ட்டாராம்.!

October 13, 2017


தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி சரவெடியாக வெளிவர மெர்சல் படத்தில் தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


mersal
நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு மீண்டும் மெர்சல் படத்தின் மூலமாக திரைக்கு வந்துள்ளார், இந்த படத்தில் அப்பா விஜய், மகன் விஜய் என்பது போலவே ஜூனியர் வடிவேலுவாக நடித்துள்ளார் ராஜமாணிக்கம்.


ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த இவர், இளம் வயது வடிவேலு போலவே இருப்பதால் இவருக்கு இந்த படத்தில் வாய்ப்பு கிடைத்ததாம்.


அந்த ஜூனியர் வடிவேலு ஒரு பேட்டியில் கூறியதாவது, விஜய் அண்ணாவை ரொம்ப பிடிக்கும் அவர் கூடவே நடிப்பேனு துளி கூட நினைச்சு பாக்கல என கூறியுள்ளார்.

மேலும் நான் நடிக்கறத பார்த்துட்டு அட்லீ மற்றும் விஜய் சார் என ரெண்டு பேருமே பாராட்டுனாங்க அதுமட்டுமில்லாமல் நடிப்பால படிப்பை விட்டுட கூடாது நல்ல படிக்கணும் என விஜய் அட்வைஸ் செய்ததாக கூறியுள்ளார் அந்த ஜூனியர் வடிவேலு ராஜமாணிக்கம்.