இணையத்தில் தெறிக்க விட்டு கொண்டாடும் தளபதியன்ஸ் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

November 14, 2017


தளபதி விஜய் பற்றிய எந்தவொரு விசியம் என்றாலும் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர் தளபதி ரசிகர்கள், நேற்று தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்த துப்பாக்கி படம் வெளியாகி 5 வருடங்கள் நிறைவடைந்திருந்தன.


thalapathy
இந்நிலையில் இன்றும் தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள் தான், விஷயம் என்னவென்றால் இதே நாளில் 16 வருடங்களுக்கு முன்பாக அதாவது 2001-ல் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த ஷாஜகான் படம் வெளியாகி இருந்தது.


இந்த படத்தில் இடம் பெற்றிருந்த மெல்லினமே மெல்லினமே, மின்னலை பிடித்து மின்னலை பிடித்து என்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளன.


அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கோவை சரளா, விவேக் காமெடிகள் இன்னும் மறையாமல் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.