இதெல்லாம் ஓவர், விஜய் அவார்ட்ஸ் பற்றி பிரபல நடிகர் பரபரப்பு கருத்து.!

May 22, 2018


பிரபல முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் விஜய் டிவி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இந்த தொலைக்காட்சி சேனல் ஒவ்வொரு வருடமும் விஜய் அவார்ட்ஸ் என்ற பெயரில் திரையுலக பிரபலங்களுக்கு விருது அளித்து வருகிறது.


vijay awards
இதுவரை 9 வருடங்களை நிறைவு செய்துள்ள விஜய் அவார்ட்ஸ் விருது விழா இந்த வருடம் 10-ம் ஆண்டு என்பதால் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளும் மும்மரமாக நடந்து வருகின்றன. ஆனால் இந்த விருதுக்கு தகுதியானவர்கள் என பிரபலங்களையும் படங்களையும் ஒருதலை பட்சமாக தேர்வு செய்திருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான சித்தார்த் விஜய் அவார்ட்ஸ் குறித்து ஆவேசமாக ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் ஸ்டார் குழுமம் ஒட்டு மொத்த திரையுலகின் மீதும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.


vijay awards

இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை, சாட்டிலைட் உரிமை என அனைத்தையும் வாங்கி திரையுலகில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் விருது விழா என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எல்லாம் வெற்றி பெறுபவர்களுக்கு என்பது போலாகி விடுகிறது. இதேபோல் ஸ்டார் குழுமத்தின் ஆதிக்கம் தொடர்ந்தால் விரைவில் தமிழ் சினிமா அழிந்து விடும் என பதிவிட்டுள்ளார்.
Latest