சிஸ்டத்தை மாற்றினால்தான் தமிழகம் உருப்படும் - ரஜினியின் சூசகமான பேச்சு

May 19, 2017


நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். முதல்நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், கடைசி நாளான இன்றும் அரசியல் கருத்தை தெரிவித்துள்ளார்.


rajini
Tamils will be created only by changing the system - Rajini's hot talk


அதோடு இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி ; ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை.


தமிழகத்தில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. இது மொத்தத்தையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும். அதற்கான நேரம் வரும்.

நம்மை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். அவதூறு எல்லாம் உரம்தான். அதை நம்முடைய வளர்ச்சிக்கானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதான் நாம வளரமுடியும். ஒரு செடி வளர நிறைய செய்ய வேண்டும் அதுபோலதான் அரசியலும்.

அரசியலில் எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். மு.க ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நிர்வாகி. பாமக அன்புமணி நல்ல மனிதர். திருமாவளவன் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். சீமான் சிறந்த போராளி.

தமிழகத்தில் சிஸ்டத்தை மாற்றனும். சிஸ்டத்தை மாற்றினால்தான் தமிழகம் உருப்படும் என்று தான் அரசியலுக்கு வருவதை சூசகமாக கூறிஉள்ளார் ரஜினி.