சிஸ்டம் சரியில்லை - கமல் பாணியில் குழப்பிய ரஜினி

May 19, 2017


கடைசி நாளாக தனது ரசிகர்களை சந்தித்த ரஜினியின் இன்றைய பேச்சு எல்லோரும் இருக்காங்க. ஆனால் சிஸ்டம் சரியில்லை என்பது தான்.அவரின் இந்த கருத்துக்கு அர்த்தம் நான் தனிக்கட்சி தொடங்கி அரசியலுக்கு தனியாகத் தான் வருவேன் என்பதே.


rajini
System is not right - Rajini baffled in Kamal style


இதுவரை அரசியலை பற்றி பேசாமலே இருந்து வந்த ரஜினி தற்போது அரசியலை பற்றி தானே பேச ஆரம்பித்துள்ளார். அதாவது தெளிவாக குழப்பி வருகிறார்.அதோடு தான் அரசியல் வருவதை தனது பேச்சின் மூலமாக உணர்த்தி வருகிறார்.


இந்நிலையில் மு.க.ஸ்டாலின், திருமாவளவன், சீமான், அன்புமணி என தமிழகத் தலைவர்களை பாராட்டி புகழ்ந்து பேசிய ரஜினி இறுதியில் யாருமே சரியில்லை என்று கூறிவிட்டார். அதாவது எல்லோரும் இருக்காங்க. ஆனால் சிஸ்டம் சரியில்லையே கெட்டு விட்டதே என தெரிவித்துள்ளார்.

அதை சரி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அதை நான் செய்ய விரும்புகிறேன் எனவும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அதோடு தனிக்கட்சி துவங்கவிருப்பதாகவும் அவரது கருத்தில் தெரிகிறது.இத்தனை காலமாக ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்று கூறி வந்தவர்கள் எல்லாம் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் இன்று பேசியுள்ளார். இவரின் இத்தகைய பேச்சு எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நேற்று வரை அரசியல் பற்றி கேட்காதீர்கள் என்று கூறிய ரஜினி, இன்று தானாக முன்வந்து அரசியல் பற்றி பேச ஆரம்பித்துள்ளார் அதோடு சிஸ்டம் பற்றியெல்லாம் பேசியுள்ளார். நாளை ரஜினி என்ன செய்ய இருக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.